கரூர்-L.V.B.நகரில் அருள்மிகு ஸ்ரீ அஷ்டலட்சுமி ஆலயத்தில் 29 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

கரூர்-L.V.B.நகரில் அருள்மிகு ஸ்ரீ அஷ்டலட்சுமி ஆலயத்தில் 29 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.
கரூர்-L.V.B.நகரில் அருள்மிகு ஸ்ரீ அஷ்டலட்சுமி ஆலயத்தில் 29 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. கரூர்- மதுரை பைபாஸ் சாலை எல் .வி. பி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அஷ்டலட்சுமி ஆலயம் 29 ஆம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் L.V.B நகர் கோவில் நிர்வாகிகளும், பொதுமக்களும் இவ்விழாவை மிக சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்திருந்தனர். இவ்விழாவை சிறப்பிக்க அபிராமி கலைக்கூட நிறுவனர் பாண்டியம்மாள் - ஆசிரியை அவர்களின் கலைக்கூட மாணவிகளின் , கலை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்வில் பரதநாட்டிய கலைஞர் கோசரன் நாட்டியாலயா - சரண்யாவின் மாணவ- மாணவிகளும் கலந்துகொண்டு பரதநாட்டியம் , வாய்ப்பாட்டு போன்ற நிகழ்வை மிகச் சிறப்பாக செய்து தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தினார்கள். இந்த நிகழ்வை மாணாக்கர்களின் பெற்றோர்கள் எல். வி .பி நகர் பொதுமக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டு , அபிராமி கலைக்கூடத்தில் பயிற்சி பெறும் மாணவ - மாணவிகளை பாராட்டி பொன்னாடை அணிவித்து , ஷீல்டு வழங்கி கௌரவித்தனர்.
Next Story