பள்ளிக்கல்விதுறை அமைச்சர் உதயநிதி ரசிகர் மன்ற பணிகளில் செலுத்தும் கவனத்தை பள்ளிக்கல்வித்துறையில் கவனம் MAFOI க.பாண்டியராஜன் விருதுநகரில் பேட்டி*

பள்ளிக்கல்விதுறை அமைச்சர் உதயநிதி ரசிகர் மன்ற பணிகளில் செலுத்தும் கவனத்தை பள்ளிக்கல்வித்துறையில் கவனம் செலுத்தவில்லை என முன்னாள் அமைச்சர் கழக கொள்கைபரப்பு துணைசெயலாளர் MAFOI க.பாண்டியராஜன் விருதுநகரில் பேட்டி*
எடப்பாடியார் ஆட்சி இருக்கும் வரை உயர்கல்வி கற்ப்பவர்களின் எண்ணிக்கையில் 52 சதவீதமாக இருந்து இந்தியளவில் தமிழகம் முதலிடம் இருந்த நிலையில் இன்று பள்ளிகல்விதுறையின் நிர்வாக சீர்கேட்டால் இன்று தமிழகம் இன்று 5 ம் இடத்திற்க்கு தள்ளப்பட்டுள்ளது தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் உதயநிதி ரசிகர் மன்ற பணிகளில் செலுத்தும் கவனத்தை பள்ளிக்கல்வித்துறையில் கவனம் செலுத்தவில்லை என முன்னாள் அமைச்சர் கழக கொள்கைபரப்பு துணைசெயலாளர் MAFOI க.பாண்டியராஜன் விருதுநகரில் பேட்டி
விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் பாதாள சாக்கடை இணைப்பு குழாய்களில் ஏற்பட்ட பழுது காரணமாக தடுப்புகள் அமைக்கப்பட்டு பல மாதங்களாக போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது சிரமங்களை முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் அதைத்தொடர்ந்து விருதுநகரின் மையப்பகுதியில் செல்லும் கௌசிகா மகாநதியில் பாதாள சாக்கடை கழிவுநீர்கள் கலப்பதால் கழிவுநீர் ஓடையாக மாறி உள்ளது மேலும் அந்த பகுதியில் புதர்கள் சுற்றி காணப்படுவதால் அவற்றை தூர் வாருவது குறித்து முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஆய்வு செய்தார் இந்த கவுசிகா மகாநதியை மாபா பாண்டியராஜன் அவர்கள் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தூர் வாரிய நிலையில் தற்போது இந்த கௌசிகா மகாநதி பயன்பாடு இன்றி கழிவுநீர் கால்வாயாக மாறி இருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியதாகவும் இந்த பகுதியை தூர் வருவதை மக்கள் இயக்கமாக மாற்ற இருப்பதாகவும் கூறினார் அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் பாட புத்தகங்களில் விலை உயர்வு பெரும் தவறை அரசு செய்து விட்டதாகவும் அதற்கு அமைச்சர் கூறிய கருத்தும் தவறானது இத்தனை ஆண்டுகளாக பாடப் புத்தகங்களின் விலையை கூட்டவில்லை என்ன காரணம் காட்டி பாடப்புத்தகத்தின் விலையை தற்போது உயர்த்துவது தவறு எனவும் இத்தனை ஆண்டுகளாக பாட புத்தகத்தின் விலையை உயர்த்தாததற்கு காரணம் 100% மாணவர்கள் பள்ளிக்கு வர ஆரம்பித்திருப்பதாகவும் இதற்கு பல சிரமங்களை சந்தித்த நிலையில் அதிமுக அரசு பள்ளிக்கு மாணவர்களை கொண்டுவர 14 முக்கிய திட்டங்களை கொண்டு வந்ததாகவும் இந்த முக்கிய திட்டங்களை திமுக அரசு சிதைத்தன் காரணமாகவே இந்திய அளவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை முதல் இடத்தில் இருந்து இந்த மூன்று ஆண்டுகளில் 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் இதற்கு திமுக அரசின் முடிவுகளை காரணம் எனவும் குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு நூற்றுக்கு 52 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வி சென்ற நிலையில் தற்போது அது 47 சதவீதமாக குறைந்து இருப்பதாகவும், தற்போது தமிழகத்தில் இளைஞர்கள் மீது பலவித தாக்குதல் நடைபெற்று வருவதாகவும் தமிழகத்தில் பள்ளிகளில் முன்புறம் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாகவும் கஞ்சா விற்பனை தொடர்பாக யாரை கைது செய்தாலும் அவர்கள் திமுக உறுப்பினர்களாகவும் திமுகவினராகவும் இருப்பதாகவும் மாணவருக்கு அத்தியாவசிய தேவையான புத்தகத்தை விலை ஏற்றிவிட்டு தேவையில்லாத கஞ்சாவை பள்ளி வாசலிலேயே விற்பதாகவும் இது கல்வியை அளிக்கக்கூடிய யுக்தி யாக பார்ப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் தனது ரசிகர் மன்ற பணியை ஒதுக்கி வைத்து விட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு நேரம் ஒதுக்கி பணியை செய்ய வேண்டும் எனவும் இதை பார்த்தால் அவருக்கே அவல நிலை புரியும் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் tab வழங்கப்படும் என அறிவித்திருந்தார்கள் தற்போது வரை யாருக்கும் வழங்கவில்லை அப்படி அதை வழங்கியிருந்ததாவது புத்தகத்தின் விலையை ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை என விமர்சித்தார் எந்த கவனமும் இல்லாமல் பள்ளிக் கல்வித் துறையை தமிழக அரசு அளித்து வருவதாகவும் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் 30 சதவீதம் மட்டுமே உயர் கல்வி நோக்கி செல்வதாகவும் திராவிட கட்சிகள் செய்த வரலாற்று சாதனையை தற்போது இந்த விடியோ அரசு பின்னோக்கி அழைத்துச் செல்வதாகவும் விருதுநகரில் பாயும் கௌசிகா மகாநதியை சீரமைக்கும் பணியை மக்கள் இயக்கமாக மாற்ற இருப்பதாகவும் இதற்கு மத்திய மாநில அரசுகள் தங்களுக்கான நிதியை வழங்க வேண்டும் எனவும் இவற்றை சீரமைக்க தேவையான நிதியை திமுக அரசுக்கு கேட்டு பெற திராணி இல்லை என்றாலும் அதிமுக இது குறித்து டெல்லியில் பேசி உரிய நிதியை பெற்று பம்பையாரு திட்டத்தை முழுமையாக வெற்றி பெற செய்து இந்த முக்கியமான திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறினார்
Next Story