பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி (mannkibaat)

கல்லூரி மாணவ,மாணவிகள் பார்வையிட்டு பயன்பெறும் வகையில் மனதின் குரல் நிகழ்ச்சி நேரலை ஒளிப்பரப்பட்டது. இந்நிகழ்ச்சியினை 500க்கு மேற்பட்ட கல்லூரி மாணவ,மாணவிகள் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் யூபிஎஸ் தேர்வுக்கு தேவையான தகவல் கிடைத்து. நிகழ்ச்சி பெரும் பயனாக அமைந்து என பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி (mannkibaat) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 3, 2014 முதல் தொடர்ந்து நாட்டு மக்களுடன் அனைத்திந்திய வானொலி மற்றும் தூர்தர்சன் தேசியக் தொலைக்காட்சி மற்றும் தூர்தர்ஷன் செய்தி தொலைக்காட்சிகள் மூலம் நாட்டு மக்களிடையே மாதம் ஒரு முறை உரையாற்றுகிறார். இந்தி மொழியில் வெளியாகும் மனதின் குரல் நிகழ்ச்சியை இந்தி மொழி அறியாத மக்கள் கேட்கும் பொருட்டு, உடனடியாக அனைத்து 29 முக்கிய இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஊடகங்களில் வெளியிடப்படுகிறது. மனதின் குரல் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் "அன்றாட நிர்வாகத்தின் பிரச்சினைகள் குறித்து குடிமக்களுடன் ஒரு உரையாடலை ஏற்படுத்துவதாகும். இதன்படி நாட்டு மக்களுடன் தமது எண்ணங்களை பிரதமர் நரேந்திரமோடி பகிர்ந்து கொள்ளும் 125 வது மனதின் குரல் நிகழ்ச்சி ஆகசவாணியில் இன்று காலை 11மணியளவில் ஒளிப்பரப்பானது. இதில் நரேந்திர மோடி பேசுகையில் நாட்டின் நடப்புகள், இயற்கை பேரழிவு உட்பட பல நிகழ்ச்சிகளை பகிர்ந்தார். பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனம் சார்பில் கல்லூரி மாணவ,மாணவிகள் பார்வையிட்டு பயன்பெறும் வகையில் மனதின் குரல் நிகழ்ச்சி நேரலை ஒளிப்பரப்பட்டது. இந்நிகழ்ச்சியினை 500க்கு மேற்பட்ட கல்லூரி மாணவ,மாணவிகள் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் யூபிஎஸ் தேர்வுக்கு தேவையான தகவல் கிடைத்து. நிகழ்ச்சி பெரும் பயனாக அமைந்து என பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
Next Story