மதுரை திமுக MLAவும் மாவட்ட செயலாளருமான கோ.தளபதியை சந்திக்க வீட்டிற்கு சென்ற திமுக நிர்வாகி திடரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுரை திமுக MLAவும் மாவட்ட செயலாளருமான கோ.தளபதியை சந்திக்க வீட்டிற்கு சென்ற திமுக நிர்வாகி  திடரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
மதுரை திமுக MLAவும் மாவட்ட செயலாளருமான கோ.தளபதியை சந்திக்க வீட்டிற்கு சென்ற திமுக நிர்வாகி திடரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
மதுரையில் திமுக MLAவும் மாவட்ட செயலாளருமான கோ.தளபதியை சந்திக்க வீட்டிற்கு சென்ற திமுக நிர்வாகி திடரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - இன்று காலை 10 மணிக்கு மேல் உடற்கூராய்வு நடைபெறவுள்ளது. திமுக வட்ட செயலாளர் மீதான பண புகார், ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தியது தொடர்பாக தலைமைக்கு புகார் அனுப்பி தீக்குளிக்க போவதாக கடிதம் அளித்தும் - அலட்சியம் காட்டிய திமுக - பரிதாபமாக பறிபோன திமுக நிர்வாகியின் உயிர். அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கும் மதுரை மாநகர திமுக மாவட்ட செயலாளர் கோ. தளபதி மதுரை மாநகர ஆவின் திமுக தொழிற்சங்க கௌரவத் தலைவராக பதவி வகித்து வந்தவர் மதுரை மானகிரி பகுதியைச் சேர்ந்த கணேசன் இவர் கடந்த 10 ஆண்டுளுக்கு மேலாக திமுகவில் நிர்வாகியாக பணியாற்றிவருகிறார் இந்நிலையில் திமுக நிர்வாகி மானகிரி கணேசன் கடந்த ஆண்டு ஜீன் 28ஆம் தேதி மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை முன்பாக தமிழக ஆளுநரை மாற்றக் கோரி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார் அப்போது உடல் முழுவதிலும் மண்ணெண்ணெய் ஊற்றியதால் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் மானிகிரி பகுதி திமுக வட்ட செயலாளர் 3.5 கோடி ரூபாய் அளவிற்கு திடிரென சம்பாதித்துள்ளதாகவும், தான் ஆளுநருக்கு எதிராக தீக்குளிக்க முயன்று உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் திமுகவினர் யாரும் சந்தித்து ஆறுதல் ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை எனவும், இதனால் உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், தனது புகார் குறித்து நேரடியாக அமைச்சர் மூலமாக விசாரிக்கலாம் எனவும், தனது புகார் கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை என்றால் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள கருணாநிதி சிலை முன்பாக தீக்குளித்து உயிரை மாய்ப்பேன் என கடிதம் மூலமாக எழுதி திமுக நிர்வாகி மானகிரி கணேசன் திமுக தலைமைக்கும் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தளபதிக்கும், அமைச்சர்களுக்கும், மேயருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதம் அனுப்பி வைத்த நிலையில் அதனை திமுக தலைமையும் , மாநகர் மாவட்ட திமுக தலைமையும் கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து. மதுரை மூலக்கரை பகுதியில் உள்ள மதுரை மாநகர திமுக மாவட்ட செயலாளர் கோ. தளபதியின் வீட்டிற்கு திமுக நிர்வாகியான மானகிரி கணேசன் நேற்று காலை சென்றுள்ளார் அப்போது வீட்டிற்கு சென்ற சில நிமிடங்களில் திடீரென வீட்டிற்கு வெளியே நின்றபடி மானகிரி கணேசன் தான் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் 90% தீக்காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் தற்கொலை விவகாரம் தொடர்பாக கணேசனிடம் மதுரை மாவட்ட 6ஆவது நீதிமன்ற நீதிபதி அவர்கள் நேரில் வந்து வாக்குமூலம் பெற்று சென்றார் இந்நிலையில் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி திமுக நிர்வாகி மானகிரி கணேசன் உயிரிழந்த நிலையில் அவரது உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டுள்ளது . இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்
Next Story