நாமக்கல் உழவர் சந்தை மற்றும் மாவட்ட மைய நூலகம் ஆகிய பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் MLA ஆய்வு

உழவர் சந்தை மற்றும் மாவட்ட மைய நூலகத்தில் உள்ள குறைகளை சுட்டி காட்டி, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உடனடியாக பணிகளை மேற்கொள்ள நாமக்கல் சட்ட மன்ற உறுப்பினர் ராமலிங்கம் MLA அறிவுறுத்தினார்.
நாமக்கல் உழவர் சந்தையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் ஆகியவை உள்ளே புகுவதால் விவசாயிகள் மற்றும் காய்கறி வாங்க வரும் பொது மக்களுக்கு இடையூறாக இருப்பதை அறிந்த நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் எம்எல்ஏ,வேளாண் விற்பனை துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் அப்பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து உழவர் சந்தையில் மழைநீர்,கழிவுநீர் ஆகியவை உள்ளே புகாமல் கழிவுநீர் கால்வாய் வழியாக செல்ல வடிகால் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டார், மேலும் நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் வளர்ச்சி பணிகள்,சுகாதார பணிகள்,வாசகர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த ஆய்வு மேற்கொண்டனர்.சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உடனடியாக பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.இந்த ஆய்வில் நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி,தெற்கு நகர கழக செயலாளர் ராணா ஆனந்த்,மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் நாசர்,உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சேகர்,மாநகராட்சி செயற்பொறியாளர் சண்முகம்,உதவி பொறியாளர் கண்ணன், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி,துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார், மாவட்ட நூலக அலுவலர் தேன்மொழி,மைய நூலக அலுவலர் சக்திவேல், மாமன்ற உறுப்பினர் டாக்டர்.விஜய் ஆனந்த், வார்டு செயலாளர் புவனேஸ்வரன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் உமாசங்கர், மைய நூலக வாசகர் வட்ட தலைவர் பசுமை தில்லை சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story