கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலை அமைக்க MP பூமி பூஜை
Tirupathur King 24x7 |24 Sep 2024 7:16 AM GMT
கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலை அமைக்க MP பூமி பூஜை
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் pm gsyகிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் ஆறு கோடி மதிப்பிலான சாலை புறனமைப்பு பணிக்கு பூமி பூஜை போட்டு துவக்கி வைத்த எம்பி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி திருப்பத்தூர் மற்றும் கந்திலி ஒன்றியங்களில் 6 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் pmgsy சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் வாயிலாக புதுப்புங்குளம் சாலை முதல் ஏகே மோட்டூர் வரையிலும் அதேபோல் டிஎஸ் சாலை முதல் புதூர் நாடு ,ஜம்மணபுதூர், குமரன் நகர், வரையிலும் மேலும் குறும்பேரி முதல் மாம்பாக்கம் வரை உள்ளிட்ட பகுதிகளில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து மேற்கத்தியானூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 24 முதல் 28 ஆண்டிற்கான 34.23 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணிகளுக்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார் அதன் பின்னர் பேசிய எம்பி அண்ணாதுரை தற்போது தமிழ்நாட்டின் அடுத்த வருவது பொற்கால ஆட்சி எனவே தமிழ்நாட்டில் மக்களுக்கு எது தேவை என்பதை புரிந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார் என பேசினார் இந்த நிகழ்வில் கந்திலி ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன் மோகன்ராஜ்,மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன். கந்திலிசேர்மன். திருமதி திருமுருகன். கந்திலி துணை சேர்மன் மோகன் குமார். மற்ற பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பூபதி. துணைத் தலைவர் திருப்பதி. மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story