பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் MP, அவர்களின் பிறந்த நாள் நிர்வாகிகள் கொண்டாட்டம்..
Rasipuram King 24x7 |9 Oct 2024 2:06 PM GMT
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் MP, அவர்களின் பிறந்த நாள் நிர்வாகிகள் கொண்டாட்டம்..
முன்னாள் மத்திய சுகாதாரத்துறை, மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் MP, அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் நிர்வாகிகள் தொண்டர்கள் அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி நாமக்கல் கிழக்கு மாவட்டம், இராசிபுரம் நகரத்தில் கோனேரிப் பட்டியில் உள்ள நகராட்சி துவக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு,புத்தகம் பேனா, போன்றவைகள் வழங்கப்பட்டன, இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அரிமா. ஆ.மோகன்ராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் ஓ.பி.பொன்னுசாமி, மாநில இளைஞர் சங்க செயலாளர் தி.பாலு, நகர செயலாளர் மணி, நகர தலைவர் சுரேஷ், வெடி மாரிமுத்து,அருள் வன்னியரசு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இதேபோல் பல்வேறு இடங்களில் பாமக நிர்வாகிகள் அவரின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர்.
Next Story