இராசிபுரம்: புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டிய M.P கே. ஆர்.என்.ராஜேஷ்குமார் மற்றும் அமைச்சர் மா.மதிவேந்தன்
Namakkal (Off) King 24x7 |24 Nov 2024 4:33 PM GMT
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10.58 கோடி மதிப்பீட்டில் இராசிபுரம் நகர புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகராட்சி, அணைப்பாளையத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் இன்று பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தலைமையில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10.58 கோடி மதிப்பீட்டில் இராசிபுரம் நகர புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.தமிழ்நாடு முதலமைச்சர் இராசிபுரம் நகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதியும் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் 2024-25 கீழ் இராசிபுரம் நகர புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு ரூ.10.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் இன்றைய தினம் இராசிபுரம் நகர புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இப்புதிய பேருந்து நிலையம் 52 கடைகள், 30 பேருந்து நிறுத்துமிடம், 2 உணவு விடுதிகள், இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம் – 1, நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம் – 1, நேரம் காப்பாளர் அறை – 1, காவலர் அறை – 1 மற்றும் தாய்மார்கள் பாலுட்டும் அறை -1 உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. பேருந்து நிலையத்தின் மொத்த பரப்பளவு 28,455 சதுர மீட்டர், தற்போது 16,200 சதுர மீட்டர் பரப்பளவு இடத்தில் பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், இராசிபுரம் நகர்மன்ற தலைவர் முனைவர் கவிதா சங்கர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story