ராசிபுரத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர்,MP, ராஜேஷ்குமாருக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனர்...

ராசிபுரத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர்,MP, ராஜேஷ்குமாருக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனர்...
X
ராசிபுரத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர்,MP, ராஜேஷ்குமாருக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனர்...
அரசு திட்டங்களில் முதல்வர் பெயரை பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்து நிலையில், ராசிபுரத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர்,MP, ராஜேஷ்குமாருக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனர்... ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் தீபாவளிக்குள் தண்ணீர் தங்குதடையின்றி வெள்ளோட்டமாக தண்ணீர் செல்லும் என எம்.பி ராஜேஷ்குமார் பேச்சு... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட காக்காவேரி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆனது நடைபெற்றது. இந்த முகாமில் பட்டா பெயர் மாற்றம்,மின்சார சேவை, இ சேவை,மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பொதுமக்கள் விண்ணப்பித்து பயனடைந்து வரும் நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார்,மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு செய்து பொதுமக்களிடையே சிறப்பு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் பேசுகையில் கடந்த 40 வருடங்களாக ராசிபுரம் பகுதியில் தண்ணீர் பிரச்சனை இருந்த நிலையில் தற்போது ராசிபுரம் நகரத்தில் வெள்ளோட்டம் நடைபெற்று வருவதாகவும், தீபாவளிக்குள் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி முழுவதும் தண்ணீர் தங்கு தடை இன்றி வெள்ளோட்டமாக தண்ணீர் செல்லும் என பேசினார்.மேலும் மாற்றுக் கட்சியை சேர்ந்த நபர் ஒருவர் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ளதாகவும், தற்போது பட்டா மாறுதல் செய்ய வந்ததாகவும் இதனை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்... முன்னதாக அரசு திட்டங்களில் முதல்வர் பெயர் பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்த நிலையில் அதனை கொண்டாடும் விதமாக அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி ஆகியோருக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அட்மா குழு தலைவர் ஒன்றிய கழகச் செயலாளர் கே.பி. ஜெகநாதன், மற்றும் கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்...
Next Story