ஜோலார்பேட்டையில் பூ பந்தாட்ட போட்டியை துவக்கி வைத்த MP மற்றும் MLA

ஜோலார்பேட்டையில் பூ பந்தாட்ட போட்டியை துவக்கி வைத்த MP மற்றும் MLA
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பூ பந்தாட்ட போட்டியை துவக்கி வைத்த MP மற்றும் MLA திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு மைதானத்தில் பூப்பந்தாட்ட 10 ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான ஆண்கள் ஐவர் பூப்பந்தாட்ட போட்டியை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார் இந்த விளையாட்டு போட்டியில் திருப்பத்தூர் மாவட்ட அளவில் விளையாட்டு போட்டியில் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர் விளையாட்டு வீரர்களை உற்ச்சா படுத்தினர் இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் கவிதாதண்டபாணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன், நகராட்சி ஆணையர் பிரான்சில் சேவியர், ஜோலார்பேட்டை நகர மன்ற துணைத்தலைவர் இந்திரா பெரியார்தாசன், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் பெரியார்தாசன், தாமோதிரன், வீரப்பன், மோகன், முரளி, வார்டு செயலாளர் முனிசாமி மற்றும் பூப்பந்தாட்ட சங்க நிர்வாகிகள், வீரர்கள் கலந்து கொண்டார்கள்.
Next Story