நான் இருக்கும் வரை சோர்வுக்கு இடம் கிடையாது - சேலம் MP,TMS

X
Edappadi King 24x7 |3 Sept 2024 10:53 PM ISTஎடப்பாடி நகரத்தில் நடைப்பெற்ற திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் TM.செல்வகணபதி கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகரத்திற்குட்பட்ட திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி நகர திமுக சார்பில் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேலம் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி தலைமையில் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் திமுக அரசு செய்த காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை எடுத்துக்கூறி இல்லந்தோறும் சென்று இளைஞர்களை திமுகவில் அதிகளவில் சேர்த்து வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டுமென கேட்டுக் கொண்டார். அதற்கு முன்னதாக வார்டு வார்டு செயலாளர்களுக்கு இடையே கருத்து கேட்கப்பட்டது அதில் வார்டு உறுப்பினர் ஒருவர் கூறும்போது அடிமட்ட தொண்டர்களை கட்சி நிர்வாகிகள் மதிப்பதில்லை என தன் ஆதங்கத்தை தெரிவித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு எங்களை சோர்வு அடையாமல் புத்துணர்ச்சி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி எம் செல்வகணபதி பேசுகையில் இனி நான் இருக்கும் வரையில் சோர்வு என்ற பேச்சுக்கு இடமில்லை என பேசினார் அப்போது திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கைதட்டி வரவேற்றனர். அதற்கு முன்னதாக எடப்பாடி நகர திமுக சார்பில் சேலம் நாடாளுமன்ற தொகுதி மற்றும் புதுவைத்தல் தொகுதி உட்பட தமிழகத்தில் 40 தொகுதிகளை வெற்றி பெற வைத்த திமுக தலைவருக்கு நன்றி தெரிவித்தும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு எடப்பாடி நகரப் பகுதிகளில் கலைஞரின் திருவுருவ சிலை அமைக்க இடம் தேர்வு செய்யவும், புதிய வாக்காளர் சேர்த்தல் மற்றும் இறந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குதல் போன்ற 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளில் விலகி 20க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர் அவர்களை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் செல்வகணபதி கட்சியின் துண்டு அணிவித்து வாழ்த்தி வரவேற்றார் அப்போது எடப்பாடி நகர மன்ற தலைவர் டி எஸ் எம் பாஷா மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் முருகேசன், எடப்பாடி ஒன்றிய கழகச் செயலாளர் நல்லதம்பி, எடப்பாடி நகரக் கழக துணைச் செயலாளர் வடிவேல் உட்பட திமுக நிர்வாகிகள் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்..
Next Story
