திமுகவினர் அராஜகத்திற்கு ஆண்டவன் முற்றுப்புள்ளி வைப்பான்- கரூரில் முன்னாள் அமைச்சர் M.R விஜயபாஸ்கர் பேட்டி.

திமுகவினர் அராஜகத்திற்கு ஆண்டவன் முற்றுப்புள்ளி வைப்பான்- கரூரில் முன்னாள் அமைச்சர் M.R விஜயபாஸ்கர் பேட்டி.
திமுகவினர் அராஜகத்திற்கு ஆண்டவன் முற்றுப்புள்ளி வைப்பான்- கரூரில் முன்னாள் அமைச்சர் M.R விஜயபாஸ்கர் பேட்டி. கரூர்-கோவை சாலையில் ஆண்டாங்கோயில் மேல்பாகம் ஊராட்சி கோவிந்தம் பாளையத்தில் வசிப்பவர் அருள் (வயது 47). இவர் தாந்தோணி மேற்கு ஒன்றிய அதிமுக அம்மா பேரவை துணை தலைவராக இருந்து வருகிறார். இவர் வீட்டின் முன்புறம் உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் உள்ள பள்ளத்தில் 2 லோடு கிராவல் மண்ணை கொட்டி சமன் செய்து வீட்டிற்கு வழி ஏற்படுத்தும் பணியினை மேற்கொண்டார். இதனை அறிந்த ஆண்டாங் கோவில் மேல்பாக ஊராட்சி செயலாளர் பழனிச்சாமி, அருளிடம் இங்கு மண் கொட்டக்கூடாது என எச்சரித்ததுடன், இதனை அகற்ற வேண்டும் என்று கூறி, இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஊராட்சி செயலாளர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில் அருளை விசாரணைக்காக காவல் நிலையம் வரும்படி தகவல் தெரிவித்ததையடுத்து விசாரணைக்காக வந்த அருளை போலீசார் சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை நேற்று இரவு செய்தனர். இந்த தகவலறிந்து காவல் நிலையத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கறிஞர்கள் மூலம் அருளை ஜாமீன் எடுப்பதற்கான பணியினை மேற்கொண்டார். இந்த தகவலறிந்து அங்கு வந்த அதிமுகவினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் திரண்டனர். அவர்களை போலீசார் காவல் நிலைய வளாகத்தில் இருந்து வெளியேற்றினர். சாலையிலும் அதிமுகவினரை நிற்க விடாமல் போலீசார் விரட்டியதால் காவல் நிலைய வளாகத்திலிருந்து வெளியில் வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், நகர காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜிடம் வாக்குவாதத்தில் ஈட்டுபட்டார்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் கைது செய்யப்பட்ட அருளை கைது போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை விசாரித்த நீதிபதி பிணையில் விடுவித்தார். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அருளின் மனைவி ஊராட்சி செயலாளர் மீது புகார் அளித்தார். இதனை தொடர்ந்து காவல் நிலைய வளாகத்திலிருந்து வெளியில் வந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, அதிமுகவினர் மீது தொடர் பொய் வழக்கு பதியப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதற்கெல்லாம் ஆண்டவன் நல்ல முடிவை சொல்வான், இதற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்றார்.
Next Story