கரூர்-கொலையானவரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த முன்னாள் அமைச்சர் MR விஜயபாஸ்கர்.
கரூர்-கொலையானவரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த முன்னாள் அமைச்சர் MR விஜயபாஸ்கர். கரூர் மாவட்டம் வாங்கல் காவிரி ஆற்றுபகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தும் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் வாங்கல் ஈ வி ஆர் தெருவை சேர்ந்த மணிவாசகம் வயது 45 என்பவர் ஜூலை 13ஆம் தேதி இரவு அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாங்கல் காவல்துறையினர் 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் கரூர் அதிமுக மாவட்ட செயலாளர் எம் ஆர் விஜயபாஸ்கர் இன்று கொலையான மணிவாசகம் வீட்டிற்கு நேரடியாக சென்று மணிவாசகம் மனைவி மற்றும் அவரது தாயார் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர்களின் குடும்பத்தின் நிலை குறித்து கேட்டு அறிந்தார். மேலும் அவர்கள் அளித்த மனு ஒன்றையும் பெற்றுக் கொண்ட எம் ஆர் விஜயபாஸ்கர் கொலை தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கையில் தன்னால் இயன்ற உதவியை செய்வதாக தெரிவித்தார்.
Next Story





