வேலாயுதம்பாளையத்தில் புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் MRV.
வேலாயுதம்பாளையத்தில் புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் MRV. முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற கொள்கை முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்திற்கு வரும் 25 ,26 தேதிகளில் வருகை தரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கவும், அவரது பேச்சு கரூர் மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தவும் கரூர் கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம் ஆர் விஜயபாஸ்கர் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். இன்று புகலூர் நகராட்சிக்கு உட்பட்ட வேலாயுதம்பாளையம் பகுதியில் புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து கட்சி நிர்வாகிகளிடையே நடைபெறும் நிகழ்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார்
Next Story





