தலைமலை கிரிவலம் வந்த பக்தர்களுக்கு அன்னதானம்!-புதுக்கோட்டை பாஜக மேற்கு மாவட்ட தலைவர் N.ராமச்சந்திரன் வழங்கினார்

X
Namakkal King 24x7 |1 Feb 2026 9:31 PM IST78-வது கிரிவலமாக வந்த அந்த ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் 27 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் நடந்து வந்தனர்.
தை மாத பௌர்ணமியை முன்னிட்டு தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயிலில் நடைபெற்ற கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாதந்தோறும் பௌர்ணமி நாளில் நடைபெறும் தலைமலை கிரிவலத்தின் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே முட்டாஞ்செட்டி அடுத்த வரதராஜப்புரம் அடிவாரத்தில் தலைமலை சேவா அறக்கட்டளை மற்றும் நன்கொடையாளர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.78-வது கிரிவலமாக நடைபெற்ற இந்நிகழ்வில், அந்த ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் 27 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் நடந்து வந்தனர். இவ்வாறு கிரிவலம் வந்த பக்தர்களுக்கு தலைமலை சேவா அறக்கட்டளை உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், புதுக்கோட்டை பாஜக மேற்கு மாவட்ட தலைவருமான N. ராமச்சந்திரன் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் தலைமலை சேவா அறக்கட்டளை நிதி குழு பொறுப்பாளர் வி. சிவராஜ், நிர்வாக அறங்காவலர் அக்னி எம். ராஜேஷ், உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் எருமப்பட்டி செல்வக்குமார், கலைச்செல்வன், செந்தில் பாரதி, தேவராயபுரம் துரைசாமி, காவக்காரன்பட்டி வெங்கடாசலம், சீனிவாசன் உள்ளிட்டோர் மற்றும் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
