தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் l

X
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக துவங்கப்பட்ட செம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் (அருப்புக்கோட்டை வட்டாரம்) மற்றும் இலுப்பையூர் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ( நரிக்குடி வட்டாரம்) மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையிலான கீழ்கண்ட பணியாளர்கள் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. மருந்தாளுநர்களுக்கு 2 பணியிடங்களும், ஆய்வக நுட்புநர்நிலை-3 (Lab Technician Gr-III) பணியாளர்களுக்கு 8 பணியிடங்களும், செவிலியர்களுக்கு, (RCH,NCD,RBSK,MMU,NBSU) 60 பணியிடங்களும், பல்நோக்கு சுகாதாரபணியாளர் / சுகாதார ஆய்வாளர் நிலை- II (MPHW HI Gr-II) பணியாளர்களுக்கு பணியிடங்களும், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு (Multi Purpose Hospital Worker) பணியிடங்களும் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான தகுதிகள் மற்றும் விண்ணப்படிவம் ஆகியவை குறித்த விவரத்தினை இம்மாவட்டத்தின் http://virudhunagar.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 23.07.2025 அன்று முதல் 07.08.2025 அன்று மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
Next Story

