ஜெயங்கொண்டம் கல்லாத்தூர் மீன்சுருட்டி வரையிலான சாலையை மாநில நெடுஞ்சாலையாக அறிவிக்காமல் ODR சாலையாக அறிவித்த தமிழக அரசால் பகுதி மக்கள் ஏமாற்றம்

ஜெயங்கொண்டம் கல்லாத்தூர் மீன்சுருட்டி வரையிலான  சாலையை மாநில நெடுஞ்சாலையாக அறிவிக்காமல் ODR சாலையாக அறிவித்த தமிழக அரசால் பகுதி மக்கள் ஏமாற்றம்
X
ஜெயங்கொண்டம் கல்லாத்தூர் மீன்சுருட்டி வரையிலான சாலையை மாநில நெடுஞ்சாலையாக அறிவிக்காமல் ODR சாலையாக அறிவித்த தமிழக அரசால் பகுதி மக்கள் ஏமாற்றம்.அடைந்துள்ளனர்.
ஜெயங்கொண்டம் ஜூன்.25- ஐந்துக்கும் மேற்பட்ட கிராம மக்களை புறக்கணித்ததாக சாலை சீரமைப்பு குழு தலைவர் பாலசுப்பிரமணியன் குற்றச்சாட்டு. அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி-முதல் கல்லாத்தூர் வரையிலான போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத சாலையை மாநில நெடுஞ்சாலையாக அறிவித்து புதிய தார்சாலை அமைக்க வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டு காலமாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சாலை சீரமைப்பு குழுவின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் கல்லாத்தூர் மீன்சுருட்டி வரையிலான மாநில நெடுஞ்சாலையாக அறிவிக்காமல் ODR சாலையாக தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது இது அப்பகுதி மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து சாலை மீட்பு குழு தலைவர் பாலசுப்பிரமணியன் கூறும் போது -மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நேற்றைய தினம் தமிழக அரசு சாதாரண ODR சாலையாக கல்லாத்தூர் மீன்சுருட்டி சாலையை அறிவித்துள்ளது. கல்லாத்தூரில் இருந்து செல்லக்கூடிய மக்கள் பயன்பாட்டு தன்மை மற்றும் அதிகமான வாகனங்கள் மக்கள் பயன்படக்கூடிய சாலையாகும். அதுமட்டுமல்ல சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் துறையினரால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சிற்பம் பராமரிக்கப்பட்டு வரும் சாலையை அதிக அளவில் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சாலையினை மாநில நெடுஞ்சாலையாக அறிவிக்காமல் சாதாரண ODR சாலையாக அறிவித்திருப்பது அதிருப்தியை அளிக்கிறது. இந்த அறிவிப்பு வழங்குவதற்கு மூன்று ஆண்டு காலம் பிடித்திருக்கிறது 16 கிலோமீட்டர் சாலையை இவ்வளவு தாமதமாக அறிவித்திருப்பது அதிருப்தி அளிக்கிறது குண்டவெளி, சலுப்பை சத்திரம் அழகர்கோவில் ஆலத்திபள்ளம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராம பகுதியில் வாழக்கூடிய மக்களை புறக்கணிக்க கூடிய செயலாகவே இருந்து வருகிறது எனவே தமிழ்நாடு அரசு இச்சாலையை மாநில நெடுஞ்சாலையாக மாற்றி அறிவிக்க வேண்டும் என கூறினார்.
Next Story