திருப்பூரில் குழந்தைகளை இணையவழி குற்றங்கள் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்க OPERATION ZERO CRIME என்ற செயல்திட்டம் துவக்கம்!

திருப்பூரில் குழந்தைகளை இணையவழி குற்றங்கள் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்க, போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை ஒன்றினைந்து OPERATION ZERO CRIME என்ற செயல்திட்டம் துவக்கப்பட்டது.
திருப்பூரில்,  குழந்தைகளை இணையவழி குற்றங்கள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்க, போதை பழகத்திற்கு அடிமை ஆகாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை  ஒன்றிணைந்து OPERATION ZERO CRIME" என்ற செயல்திட்டம் துவக்கம். திருப்பூர் மாநகரில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களுக்கு நல்வழி காட்டும் நோக்கில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை  ஒன்றிணைந்து OPERATION ZERO CRIME" என்ற செயல் திட்டத்தை இன்று துவக்கியுள்ளனர். இதற்கான நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் கிரிஸ்துராஜ் மாநகர காவல் ஆணையர் லட்சுமி, மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது குறித்து மாநகர காவல் ஆணையாளர் லட்சுமி செய்தியாளர்களிடம் பேசுகையில், OPERATION ZERO CRIME" திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குழந்தைகளுக்கு எதிரான எந்தவித குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பதும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பிரச்சனைகளில் இருந்து மீண்டுவர உரிய ஆலோசனை வழங்குவதும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் ஆகும். இத்திட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் கல்லூரி முதல்வர்கள் கொண்ட முக்கிய குழு அமைத்துள்ளது. இக்குழுவிற்கு ஆலோசனை வழங்க சட்ட ஆலோசகரும், உதவி புரிய தனிப்படை காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள் முக்கிய குழுவின் கீழ் மூன்று துணைக்குழுகள் உள்ளது. முதல் மற்றும் இரண்டாவது துணை குழுவின் கீழ் கள அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது முன்றாவது துணைக்குழுவின் கீழ் இரண்டு ஆலோசனை குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் துணை குழுவின் கீழ் உள்ள கள அதிகாரிகளான ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆலோசனை வழங்குவார்கள். இரண்டாவது துணை குழுவின் கீழ் உள்ள கள அதிகாரிகளான காவல் உதவி ஆணையர்கள் மாநகரில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கும். சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் திருப்பூர் மாநகரில் உள்ள மேல்நிலைபள்ளி, உயர்நிலை பள்ளிமற்றும் நடுநிலை பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். ஆலோசனை தேவைப்படும் குழந்தைகளுக்கு தகுதி வாய்ந்த ஆலோசகர்களை ஆலோசனைகள் வழங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  இரண்டு ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவில் உள்ள அதிகாரிகளுக்கு 5 பள்ளிகள் ஐந்து கல்லூரிகள் என தனித்தனியாக பிரித்து வழங்கப்பட்டிருக்கும் அவர்கள் அங்கு சென்று அந்த பள்ளி கல்லூரி முதல்வர்களிடம், பேசி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான அனுமதி மற்றும் நேரத்தை பெறுவார்கள், தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்களும் பங்கேற்க மாணவர்களின் வீட்டுக்கே சென்று பெற்றோர்களிடம் இது குறித்து அறிவிப்பார்கள். இதன் மூலம் இந்த விழிப்புணர்வானது குழந்தைகள் பெற்றோர்கள் என அனைவருக்கும் போய் சேரும்.மேலும் இத்திட்டதின் முக்கிய நோக்கம் குழந்தைகளை இணையவழி குற்றங்கள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாத்தல், போதை பழகத்திற்கு அடிமை ஆகாமல் தடுத்தல், உயிரியல் மாற்றத்துடன் வளரும் குழந்தைகளை காத்தல், போக்குவரத்து விதிமுறைகள் பற்றி கற்பித்தல், பள்ளி இடைநின்ற குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி மீண்டும் பள்ளியில் சேர்த்தல் போன்றவைகளை உள்ளடக்கியதாகும்.
Next Story