அதிமுக கூட்டணியில் தினகரன், OPS சேர்வது ஒன்றும் புதிதல்ல, அவர்கள் சேர்வதால் மட்டும் கூட்டணி பலமடைய போவதில்லை E.R. ஈஸ்வரன் தகவல்.
NAMAKKAL KING 24X7 B |28 Jan 2026 12:07 AM ISTதமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு பின் டபுள் இன்ஜின் சர்க்காரே இல்லை என்றும், ஆட்சியில் பங்கு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பேசவில்லை 2-ம் கட்ட தலைவர்கள் தான் பேசுகிறார்கள்.,
திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடரும் நம்பிக்கை உள்ளதாகவும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் E.R. ஈஸ்வரன் நாமக்கல்லில் பேட்டி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் /திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் E.R. ஈஸ்வரன், தொகுதி அலுவல் முன்னிட்டு, நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார்.அதிமுக கூட்டணியில் தினகரன், ஓபிஎஸ் சேர்வது ஒன்றும் புதிதல்ல, அவர்கள் சேர்வதால் மட்டும் கூட்டணி பலமடைய போவதில்லை, அவர்கள் ஏற்கனவே அதிலிருந்தவர்கள் தான், கூட்டணிகள் பலமாக இருந்தால் தான் போட்டியும் பலமாக இருக்கும், திமுக கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைவது குறித்து கூட்டணிக்க் தலைமை வகிக்கும் ஸ்டாலின் அவர்கள் முடிவெடுப்பார்., தமிழ்நாட்டின் வளர்ச்சி இந்தியாவி பல தரவுகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு பின் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு டபுள் இன்ஜின் சர்க்கார் என்பதே இல்லை என்றும், காங்கிரஸ் கட்சியில் உள்ள 2-ம் கட்ட தலைவர்கள் ஆட்சியில் பங்கு குறித்து பேசுவதாகவும், அது அவர்களது சொந்த கருத்து என்றும், இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜீ கார்வோ, ராகுல் காந்தியோ அதை பற்றி பேசவில்லை. அதனால் கூட்டணியில் காங்கிரஸ் தொடரும் என தெரிவித்தார்.
Next Story


