பிரதமரின் கௌரவ ஊக்கத் தொகை(PM KISAN) பெறும் விவசாயிகள், தங்கள் நிலஉடைமை விவரங்களை வலைதளத்தில் பதிவு செய்திட வேண்டும்

X
விருதுநகர் மாவட்டத்தில், வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடமை விவரங்கள், கிராமங்கள் தோறும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைதுறை மற்றும் சகோதரத்துறை சார்ந்த அலுவலர்களைக் கொண்டு, வலைதளத்தில் கட்டணமின்றி பதிவு செய்யப்பட்டு வருகிறது. இனி வருங்காலங்களில், மேற்காணும் துறைகளால்; செயல்படுத்தப்படும் அனைத்து மத்திய, மாநில அரசு திட்டங்களும், பிரதமரின் கௌரவ ஊக்கத் தொகை((PMKISAN) மற்றும் பயிர் காப்பீடு PMFBY) திட்டங்களும் இப்பதிவுகளின் அடிப்படையிலேயே செயல்படுத்தப்படவுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 1,03,016 விவசாயிகள் உள்ள நிலையில், இதுவரை 61,278 பேர் மட்டுமே பதிவேற்றம் செய்துள்ளனர். மீதம் 41,738 விவசாயிகள் பதிவு செய்யாமல் உள்ளனர். இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் தங்கள் நிலம் தொடர்பான பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் கொண்டு பதிவு மேற்கொண்டு தனிப்பட்ட அடையாள எண் பெறலாம். விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, நிலவுடைமை பதிவுக்கான கால அவகாசம் ஜீலை-15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, பிரதமரின் கௌரவ ஊக்கத் தொகை(PMKISAN) பெற்றுக் கொண்டு வரும் விவசாயிகள், தங்கள் நிலஉடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்யாவிட்டால் அடுத்த தவணை முதல் பிரதமரின் கௌரவ ஊக்கத் தொகை(PMKISAN) கிடைக்கப்பெறாது. எனவே, பிரதமரின் கௌரவ ஊக்கத்தொகை(PMKISAN) பெற்று வரும், நிலஉடைமைகளை பதிவு செய்யாத விவசாயிகள், உடனடியாக பதிவு செய்யவேண்டும்
Next Story

