கோவை: சர்ச் பாதிரியார் மீது பாய்ந்தது pocso சட்டம் !

கோவை: சர்ச் பாதிரியார் மீது பாய்ந்தது pocso சட்டம் !
X
பாதிரியார் ஜான் ஜெபராஜ் (வயது 32) என்பவர், 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இழந்த புகாரில் அவர் மீது pocso சட்டம் பாய்ந்துள்ளது.
கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள கிங் ஜெனரேஷன் சர்ச்சைச் சேர்ந்த பாதிரியார் ஜான் ஜெபராஜ் (வயது 32) என்பவர், 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததையடுத்து, அவர் மீது நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் ஜான் ஜெபராஜ் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு கோவை ஜி.என். மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் நடைபெற்ற விழாவின்போது, தனது மாமனாரால் தத்து எடுக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரரான 14 வயது சிறுமிக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமிகள் வீட்டிற்கு வரும்போதெல்லாம் பாதிரியார் ஜான் ஜெபராஜ் பலமுறை பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாகவும், இந்த விவரத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமிகள், பாதிரியாரின் தொடர் தொல்லை குறித்து தங்களது பெற்றோரிடம் கண்ணீருடன் முறையிட்டுள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், கோவை மத்திய போலீசார் பாதிரியார் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story