கோவை: POCSO வழக்கில் ரிஸ்வான் கைது !

கோவை: POCSO வழக்கில் ரிஸ்வான் கைது !
X
போக்சோ வழக்கு குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும்போது தப்பிச்சென்று மீண்டும் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான் (35) மீது 2021ஆம் ஆண்டு POCSO சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைக்காக நேற்று வந்த அவர் திடீரென தப்ப முயன்றார். போலீசாரை பிளேடை காட்டி மிரட்டி, 4 மணி நேரம் தப்பியிருந்தார். இதையடுத்து, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. மகளிர் காவல் நிலைய போலீசார் நடத்திய 3 மணி நேர கண்காணிப்பின் பின், ரிஸ்வான் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 10 பிளேடுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Next Story