ரிக் தொழில்நுட்ப நான்காம் ஆண்டு கண்காட்சியில் PRD நிறுவனத்தின் புதிய படைப்பு
Tiruchengode King 24x7 |17 Aug 2024 3:51 AM GMT
ரிக் தொழில்நுட்ப நான்காம் ஆண்டு கண்காட்சியில் PRD நிறுவனத்தின் புதிய படைப்பு
தேசிய அளவில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் தொழிலில் திருச்செங்கோடு நகரம் முன்னிலை வகிக்கிறது. ரிக் வாகனங்கள் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான திருச்செங்கோடு PRD நிறுவனத்தின் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்து wi-fi மூலம் சுரங்க பாதைகள் அமைக்கும் தொழில்நுட்பம் முறை கண்காட்சியில் பார்வையாளர்கள் அனைவரையும் கவரும் விதமாக இருந்தது இதற்கான ஒத்திகை போல் ரியாலிட்டி ஷோ நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கலந்து கொண்டு எந்திரங்களை இயக்குவது குறித்து PRD நிறுவனத்தினர் அழைத்து செய்முறை விளக்கத்தை செய்து பார்த்தார். இத்துறை தொடர்பான தொழில் வளர்ச்சிக்கும் புதிய தொழில்நுட்ப வளர்ச்சியை தெரிந்து கொள்வதற்கும் பல்வேறு அரங்குகள்இடம் பெற்றுள்ளன. ஆழ்குழாய் கிணறு அமைக்கும் வாகனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, சர்வதேச தரத்திலான புதிய தொழில்நுட்பங்கள், போர்வெல் ரிக் தொழில்நுட்பம் மற்றும் சுரங்கம் மைனிங் தொழில்நுட்பத் தகவல்கள் வல்லுநர்கள் செயல்முறை மூலம் விளக்கம் அளித்து வருகின்றனர். மேலும், புதிய தொழில்நுட்பத்தின் மூலம் பூமிக்கு அடியில் 3 ஆயிரம் அடி வரை துளையிடும் வகையில் புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நிகழ்ச்சியில் PRD நிறுவனங்களின்மேலாண்மை இயக்குனர் பரந்தாமன் கூறுகையில் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் சிமுலேட்டர் உருவாக்கி ரிக் வாகனங்கள் இயக்குவதற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது மேலும் அனாட்டமஸ் முறையில் வாகனங்களை 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ஆழ்துளை போடும் வகையில் இயக்க முடியும் எனவும் ரஷ்யாவில் கடும் குளிரில் ஆட்கள் வெளியே வர முடியாத -45 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில்இந்த அனாட்டமஸ் முறையை பயன்படுத்தி இருந்த இடத்திலிருந்து இயக்கி தொலையிட முடியும் எனவும் கூறினார். சமீபத்தில் சுரங்க விபத்தின்போது சிக்கிக்கொண்ட, தொழிலாளர்கள் மீட்கப்பட்டதில், திருச்செங்கோட்டில் இருந்து பி ஆர் டி நிறுவனங்கள் மூலம் சென்ற இந்த வாகனம் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அதி நவீன PRD நிறுவனங்களின் தயாரிப்புகளை PRD நிறுவனத்தின் CEO மிதுன் ஏற்பாடு செய்திருந்தார்
Next Story