பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம்.PRO அறிவிப்பு.

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம்.PRO அறிவிப்பு.
பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம்.PRO அறிவிப்பு. கரூர் வழியாக நாள்தோறும் திருச்சி ஜங்ஷன்-ல் இருந்து பாலக்காட்டிற்கு ரயில் எண் 16843 இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே திருப்பூர் யார்டில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் வரும் ஆகஸ்ட 11, 17 & 19 ஆகிய நாட்களில், திருப்பூருக்கு அருகில் உள்ள ஊத்துக்குளி ரயில் நிலையம் வரை மட்டுமே ரயில் இயக்கப்படும் எனவும்,   ஊத்துக்குளியில் இருந்து பாலக்காடு நகருக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில் இயக்கப்பட்டு, ஊத்துக்குளியில் இருந்து மாலை 5:30- மணிக்குப் புறப்படும் எனவும், ரயில் எண்.16843 இல் உள்ள அதே நிறுத்தங்கள் மேற்கண்ட ரயிலிலும் இருக்கும் என கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் மற்றும் பயணிகள் மேற்கண்ட பணிகள் நிறைவடைவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story