ரயில் பாதையில் பாலங்கள் கட்டும் பணி நடைபெறுவதால் ரயில் சேவைகளில் மாற்றம்-PRO அறிவிப்பு.

ரயில் பாதையில் பாலங்கள் கட்டும் பணி நடைபெறுவதால் ரயில் சேவைகளில் மாற்றம்-PRO அறிவிப்பு.
ரயில் பாதையில் பாலங்கள் கட்டும் பணி நடைபெறுவதால் ரயில் சேவைகளில் மாற்றம்-PRO அறிவிப்பு. ஈரோடு - கரூர் பிரிவில் உள்ள பாசூர் - ஊஞ்சலூர் ரயில் நிலையங்களுக்கு இடையேயான ரயில் பாலங்கள் மீண்டும் கட்டப்பட்டு வருகிறது. இதனால், 2025 ஏப்ரல் 08 & 11 ஆகிய தேதிகளில் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படும். என கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து காலை 07.20 மணிக்கு புறப்படும் ரயில் எண்.56809 திருச்சிராப்பள்ளி - ஈரோடு பயணிகள் ரயில், ஏப்ரல் 08 & 11, 2025 ஆகிய தேதிகளில் கரூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். இந்த ரயில் திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்.அந்த நாட்களில் கரூரிலிருந்து ஈரோட்டுக்கு ரயில் சேவை கிடையாது. இதே போல செங்கோட்டையில் இருந்து காலை 05.10 மணிக்குப் புறப்படும் ரயில் எண்.16846 செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ், ஏப்ரல் 08 & 11, 2025 ஆகிய தேதிகளில் கரூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். இந்த ரயில் செங்கோட்டையிலிருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்.அந்த நாட்களில் கரூரிலிருந்து ஈரோட்டுக்கு ரயில் சேவை கிடையாது. ரயில் புறப்படும் நிலையம் மாற்றம். ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ், ரயில் எண்.16845, ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயிலுக்கு பதிலாக ஏப்ரல் 08 & 11, 2025 அன்று கரூரில் இருந்து மதியம் 3.05 மணிக்கு புறப்படும். இந்த ரயில் ஈரோட்டில் இருந்து கரூர் வரை இயங்காது. அந்த நாட்களில் அது கரூரில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை வரை செல்லும் என அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
Next Story