கரூர்-வாராந்திர ரயில் வந்து சேரும் நேரம் மாற்றம்.PRO அறிவிப்பு.

கரூர்-வாராந்திர ரயில் வந்து சேரும் நேரம் மாற்றம்.PRO அறிவிப்பு.
கரூர்-வாராந்திர ரயில் வந்து சேரும் நேரம் மாற்றம்.PRO அறிவிப்பு. ரயில் எண்.16618 கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் ரயில் ஈரோடு,கரூர் திருச்சிராப்பள்ளி, காரைக்குடி, ராமநாதபுரம் வழியாக வாராந்திர எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரத்தில் வந்து சேரும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.   ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு அந்த ரயில் தற்போது புதன்கிழமைகளில் காலை 05.45 மணி நேரம் வந்து சேரும். திருத்தப்பட்ட அட்டவணையின்படி, ரயில் எண்.16618 கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் புதன்கிழமைகளில் காலை 06.15 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்றடையும்.  இந்த திருத்தப்பட்ட அட்டவணை 08.04.2025 அன்று மாலை 7.45 மணிக்கு கோயம்புத்தூர் சந்திப்பிலிருந்து புறப்படும் ரயிலில் இருந்து அமலுக்கு வரும் என கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் கோட்ட ரயில்வே செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.
Next Story