குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சேவை ரத்து -PRO

குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சேவை ரத்து -PRO
குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சேவை ரத்து -PRO கரூர் - மோகனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே, ரயில் தண்டவாளத்தின் பள்ளத்தை ஆழமாக ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. எனவே இப்பகுதியில் இயக்கப்படும் ரயில் சேவை ரத்து குறித்து சேலம் கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மயிலாடுதுறையில் இருந்து 06.20 மணிக்குப் புறப்படும் ரயில் எண்.16811 மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில், கரூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் இதற்காக நவம்பர், 02, 03, 09, 10, 16, 17, 23,24 மற்றும் நவம்பர் 30 ஆகிய தேதிகளில் (சனி மற்றும் ஞாயிறு - 9 நாட்கள்) கரூர் - சேலம் செல்வது ரத்து செய்யப்பட்டு, மயிலாடுதுறையில் இருந்து கரூர் வரை மட்டுமே ரயில் இயக்கப்படும் எனவும் , ரயில் எண்.16812 .சேலம் ஜங்ஷனிலிருந்து இருந்து 14.05 மணிக்குப் புறப்படும், சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், சேலம் - கரூர் இடையே நவம்பர் 02, 03, 09, 10, 16, 17,23,24 மற்றும் நவம்பர் 30 ஆகிய தேதிகளில் 15.40 மணிக்கு கரூர் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மேலே கண்ட 9 நாட்கள் சேலத்தில் இருந்து கரூர் வரை ரயில் இயக்கப்படாது. இது கரூரில் இருந்து புறப்பட்டு மயிலாடுதுறை வரை மேற்குறிப்பிட்ட தேதிகளில் இயக்கப்படும் என கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஜி. மரியா மைக்கேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story