ஜெயங்கொண்டம் கிளை நூலகத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்ததை RDO குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

X
ஜெயங்கொண்டம் கிளை நூலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததை RDO குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கருக்கும்,ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணனுக்கும் நூலக வாசகர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் நன்றி மற்றும் பாராட்டு தெரிவித்தனர்.
அரியலூர் செப்.26- ஜெயங்கொண்டம் கிளை நூலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கிளை நூலகமானது ஆரம்பிக்கப்பட்ட முதல் இது நாள் வரை வாடகை கட்டிடத்திலேயே இயங்கி வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் நீண்ட நாளாக தனி கட்டிடம் கேட்டு ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க.கண்ணனிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் தமிழக முதல்வரிடம் தெரிவித்து அதன்படி எம்எல்ஏ மூலம் அதற்கான இடத்தினை தேர்வு செய்யப்பட்டு தற்பொழுது ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் பழைய குறவன் குடிசை இருந்த இடத்தில் ஸ்டேட் பேங்க் காலனி செல்லும் பாதை முகப்பில் 1883 சதுர அடியில் 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரை மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டுள்ள ஜெயங்கொண்டம் கிளை நூலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷுஜா குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.உடன் ஜெயங்கொண்டம் நகர செயலாளரும், நகர மன்ற துணைத் தலைவருமான வெ.கொ.கருணாநிதி, அரியலூர் மாவட்ட நூலக அலுவலர் இரா.வேல்முருகன், கிளை நூலகர் சௌந்தர்ராஜன் உள்ளிட்ட அதிகாரிகள், நூலக வாசகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் . இதற்கு ஜெயங்கொண்டம் தொகுதி மக்கள், வாசகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணனுக்கும், போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி.சிவசங்கருக்கும் நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர்.
Next Story

