வடமாநில தொழிலாளர்களுடன் காவல் கண்காணிப்பாளர் s. விமலா IPS கலந்துரையாடல்.
NAMAKKAL KING 24X7 B |1 Feb 2026 9:33 PM ISTநாமக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அவர்களது பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் உட்கோட்ட காவல்துறை சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
லக்கம்பாளையம் பகுதியில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், நாமக்கல் உட்கோட்ட பகுதியில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் அனைவரையும் அழைத்து, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், தமிழ்நாட்டிற்கு வேலைக்காக வரும் வடமாநில தொழிலாளர்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும், சட்ட ரீதியான உரிமைகள் என்ன, ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையை அணுக வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய அறிவுரைகளையும் வழங்கினார். இதில் பங்கேற்ற வடமாநில தொழிலாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட குறைகள் மற்றும் சிக்கல்கள் குறித்து காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனம்விட்டு தெரிவித்தனர். மேலும், வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் மேலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளும் வகையில் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் நாமக்கல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் ஜோசி உடன் இருந்தார்.
Next Story




