மத்திய மாநில SC/ST அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பாக கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளரைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ....*

X
விருதுநகரில் மத்திய மாநில SC/ST அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பாக கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளரைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் .... விருதுநகர் தேசபந்து மைதானம் முன்பு மத்திய மாநில SC / ST அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பாக மாவட்டத் தலைவர் வேலாண்டி தலைமையில் மாநில தலைவர் கருப்பையா முன்னிலையில், தமிழக அரசாணை எண் 65 படி கூட்டுறவு துறையில் பணிபுரியும் SC/ST அமைப்பைச் சார்ந்த மத்திய மாநில அரசு பணியாளர்களின் குறைகளை தீர்க்க 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்த வலியுறுத்தியும், SC/ST பணியாளர்களுக்கு கீழ் நிலை அதிகாரிகளால் இழைக்கப்படும் அநீதிகளை தடுத்து நிறுத்தவும மேலும் விருதுநகர் கூட்டுறவு துறையில் கடந்த 12.2.2015 அன்று பணி புரியும் SC/ST அரசு ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் செந்தில்குமார் அவர்கள்பேச்சுவார்த்தை என்ற பெயரில் அழைப்பானை கொடுத்துவிட்டு இவர்களைப் பார்த்து சரிசமமாக பேச்சுவார்த்தை நடத்துவதா என்று எண்ணி தங்களை இழிவுபடுத்தும் நோக்கிலும், சாதிய வன்மத்துடன் போலியான உடல்நிலை சரியில்லை என தங்களுடன் பேச மறுக்கும் கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளர் செந்தில்குமார் அவர்கள் மீது துரை ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தயும், இதே போன்று அரசு ஊழியர் சங்கம் என்ற போர்வையில் சாதிய நோக்கத்துடன் திட்டமிட்டு ராமநாதபுரம் மண்டலத்தில் பணிபுரியும் பட்டியில் இன பணியாளர்களை இழிவு படுத்தி வருவதை கண்டித்தும் ,ராஜபாளையம் மருத்துவர் அலெக்சாண்டரை சாதிய நோக்கத்துடன் இழிவுபடுத்தும் அரசு ஊழியர் சங்கத்தை கண்டித்தும் கூட்டுறவுத் துறையில் பணிபுரியும் மத்திய மாநில SC / STஅரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பாக கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் செந்தில்குமார் அவர்களை கண்டித்து 20 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுப்ட்டனர் மேலும் இந்த நிகழ்வின் போது கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Next Story

