சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி SDPI கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க நோன்பு
V.களத்தூரில் நடந்த சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி SDPI கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வி.களத்தூர் சந்தை திடலில் இன்று நடைபெற்றது. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தலைவர் ஜனாப்.K.M. முஹம்மது ரபீக் தலைமை தாங்கினார்.வி.களத்தூர் பஞ்சாயத்து கமிட்டி பொருளாளர் ஜனாப்.நூர் முஹம்மது வரவேற்றார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் ஜனாப். முஹம்மது ரபீக், மாவட்ட பொதுச் செயலாளர் ஜனாப். செய்யது அபுதாஹிர் ஆகியோர் கலந்துகொண்டனர். வி. களத்தூர் ஜமாத் செயலாளர் ஹாஜி. ஹயாத் பாஷா, ஜமாத் பொருளாளர் ஜனாப். அலிராஜா, ஜமாத் துணைத் தலைவர் அல்ஹாஜ். அப்துல் ரஹீம், முன்னாள் ஊராட்சிதலைவர் ஜனாப். A.M. இஸ்மாயில், ஜமாத் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் SDPI கட்சியின் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இறுதியாக வி.களத்தூர் கமிட்டி துணைத் தலைவர் ஜனாப். அஷ்ரப் அலி நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
Next Story





