கோவை: SDPI கட்சியினர் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் !

X
வக்பு திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியினர் நேற்று கோவையில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். உக்கடம் அன்பு நகர் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடியேற்றி எதிர்ப்பை தெரிவித்தனர். மத்திய அரசு கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் வக்பு திருத்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை உக்கடம் அன்பு நகர் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் நேற்று வீடுகளில் கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்பு நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏராளமான வீடுகளில் கருப்பு கொடிகள் பறந்தன. மேலும், எஸ்டிபிஐ கட்சியினர் சாலைகளிலும் கருப்பு கொடிகளை ஏந்தி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் கைகளில் கருப்பு கொடிகளுடன் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். வக்பு திருத்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
Next Story

