ஆத்தூரில் SDPI கட்சியின் பூத் முகவர்கள் நியமன கூட்டம்

X
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் பேரூராட்சியில் SDPI கட்சியின் BLA-2 பூத் முகவர்கள் நியமன கூட்டம் நடைபெற்றது. நகரத் தலைவர் ஜாஹிர் உசேன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயற்குழு உறுப்பினரும் மாவட்ட BLA பொறுப்பாளரும் ஆகிய குலசை தாஹிர் மற்றும் திருச்செந்தூர் தொகுதி செயலாளர் அப்துல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டு பூத் முகவர்களை நியமனம் செய்தனர். இந்நிகழ்வில் ஆத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
Next Story

