மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம். Sp அறிவிப்பு!
Tirupathur King 24x7 |24 Dec 2024 12:52 AM GMT
மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம். Sp அறிவிப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம். Sp அறிவிப்பு! திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 14(4)-ன் படி பறிமுதல் செய்யப்பட்ட 222 இருசக்கர வாகனங்கள், மற்றும் 20 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 243 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . அதில் பயன்படுத்தக்கூடிய நிலையில் மற்றும் (scrap) உடைக்க தகுதியுள்ள வாகனங்கள் என அனைத்தையும் தமிழ்நாடு அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி 30.12.2024-ந் தேதி காலை 9.00 மணி முதல் திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. வாகனத்தை ஏலம் எடுக்க பார்வையிடுவோர் 26.12.2024-ந் தேதி முதல் 28.12.2024-ந் தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானம், பாச்சலில் நேரில் சென்று பார்க்கலாம். மேலும் ஏலத்தில் கலந்து கொள்ள ரூ. 100/- நுழைவு கட்டணம் செலுத்தி அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம். அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே ஏலத்தில் அனுமதிக்கப்படுவர். ஏலம் எடுப்பவர்கள் ஏலத்தொகையுடன் 18 % விற்பனை வரியும் சேர்த்து செலுத்த வேண்டும். இதற்கு உண்டான ரசீது வழங்கப்படும். ஏலம் எடுத்த வாகனத்திற்குண்டான ரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணமாகும். மேலும் விபரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தலைமையிடம், திருப்பத்தூர் மாவட்டம் அவர்களது அலுவலகத்தில் நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 99944 00486.
Next Story