சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு பேருந்தை SP துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு பேருந்தை SP துவக்கி வைத்தார். திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு பேருந்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா, ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்த பேருந்தில் போக்குவரத்து விதிகள், சாலையில் வாகனம் இயக்கம் முறைகள், சாலையில் உள்ள சின்னங்கள், சிக்னல்கள் போன்றவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் குறிப்புகள் உள்ளன. இந்த விழிப்புணர்வு பேருந்தானது திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்.
Next Story



