ராமநாதபுரம் உங்கள் ஊரில் உங்கள் sp திட்டம் ஆரம்பிக்கப்பட்டது

கமுதியில் உங்கள் ஊரில் உங்கள் SP என்ற புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக G.சந்தீஷ், அவர்கள் பொறுப்பேற்றது முதல் மாவட்டத்தில் உள்ள முக்கிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள், போதை பொருட்கள்/குட்கா விற்பனை குறித்த தகவல்கள் தெரிவித்தல் மட்டுமின்றி வருவாய்துறையினர் மூலம் நிவாரணம் பெறக்கூடிய பிரச்சனைகள், இளைஞர்களுக்கான எதிர்கால படிப்புகள் மற்றும் பணிவாய்ப்புகள் குறித்த அறிவுரைகள் வழங்குதல், விளையாட்டு போட்டிகள் மூலம் இளைஞர்களை ஊக்குவித்தல், கிராமங்களில் போதிய புத்தகங்களுடன் கூடிய தேவையான நூலக வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் ஆகிய இலக்குகளை மையமாகவும், பிரதானமாகவும் கொண்ட உங்கள் ஊரில் உங்கள் SP என்ற புதிய திட்டத்தினை ஆரம்பித்தார்கள். மேற்படி திட்டத்தின் தொடர்ச்சியாக கமுதி உட்கோட்டம் கோவிலாங்குளம் காவல் நிலைய சரகம், தொட்டியாபட்டி கிராமத்தில் புதியதாக நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு அறையை திறந்து வைத்தும், உங்கள் ஊரில் உங்கள் sp திட்டத்தின்மூலம் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும், காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே நட்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தொட்டியாபட்டி கிராம மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இனிப்பு வழங்கியதுடன், காவல்துறையினரால் இக்கிராமத்தில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் பற்றியும் கேட்டறிந்தார்கள். மேற்படி திட்டத்தின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் செல்ல உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் தெரிவித்துள்ளார்கள்.
Next Story