கோவை: நொய்யல் ஆற்று நீரை மலர் தூவி வரவேற்ற SP வேலுமணி !

கோவை மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் நொய்யல் ஆற்றின் நீர்வரத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பார்வையிட்டு மலர் தூவி வரவேற்றார்.
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் பருவமழையால், நொய்யல் ஆற்றில் நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, சிறுவாணி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் நொய்யல் ஆறு பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. கோவை மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் நொய்யல் ஆற்றின் நீர்வரத்தை முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி. வேலுமணி நேற்று பார்வையிட்டார். கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தென்னமநல்லூர் பகுதியில் நொய்யல் ஆற்றில் ஆர்ப்பரித்து வரும் தண்ணீரை அவர் மலர் தூவி வரவேற்றார். இதைத் தொடர்ந்து, பேரூர் படித்துறை, சித்திரை சாவடி தடுப்பணை, காளவாய் தடுப்பணை ஆகிய பகுதிகளிலும் நீர்வரத்து அதிகரித்திருப்பதை எஸ்.பி. வேலுமணி ஆய்வு செய்தார். மேலும், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
Next Story