பத்து லட்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக SP யிடம் புகார் மனு

X
திண்டுக்கல் மாவட்டம் வட மதுரையில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் மோகனசுந்தரம் தனியார் நிறுவனத்தில் கார் வாங்கியது சம்பந்தமாக மதுரை தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மேல்முறையீடு கடந்த 2023 ஆம் ஆண்டு செய்துள்ளதாகவும் இதனால் மனக்குழப்பத்தில் இருந்த பொழுது திண்டுக்கல் அருகே உள்ள மேற்கு மீனாட்சியநாயக்கன்பட்டி பகுதியில் சாமியாராக வலம் வரும் ராஜலட்சுமி என்பவரை பார்த்து தனக்கு தொடர்ந்து பிரச்சினைகள் இருப்பதாக கூறியதாகவும், அதில் அவர் சாமி பார்த்து உனது பிரச்சினையை தீர்த்து வைக்கிறேன் அதேபோல் எனக்குத் தெரிந்த வழக்கறிஞர் கணேசன் என்பவர் சின்னாளபட்டியில் உள்ளார் இவர் மதுரையில் வழக்கறிஞராக உள்ளார் என 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திண்டுக்கல் தனியார் விடுதியில் அறிமுகப்படுத்தி வைத்ததாகவும் இதை அடுத்து வழக்கறிஞர் தான் மதுரையில் மிகப்பெரிய வழக்கறிஞர் பப்ளிக் ப்ராஸிக்யூட்டராக இருப்பதாக கூறி ரூபாய் ஒரு லட்சம் வாங்கிக் கொண்டதாகவும் அதே போல் வழக்கை துரிதப்படுத்த சிலருக்கு லஞ்சம் தர வேண்டும் என்று கூறி தொடர்ந்து 5 லட்சம் ரூபாய் வரை வாங்கிக் கொண்டார் அதேபோல் வழக்கை முடிப்பதற்கு நீதிபதிக்கு 10 லட்சம் கொடுக்க வேண்டும் ஒரு மாதத்தில் வழக்கு முடிந்து விடும் என்று கூறி 2 லட்சம் காசோலையாகவும் 3 லட்சம் பணமாகவும் என்னிடம் பெற்றுக் கொண்டவர் அதன் பிறகு நான் தொடர்பு கொண்டாலும் என்னை தொடர்பு கொள்ளவில்லை அதேபோல் நான் நேரில் சென்று கேட்ட பொழுது என்னை தகாத வார்த்தைகளால் திட்டி பணம் தர முடியாது எங்கு வேண்டுமானாலும் சென்று கொள்ளுங்கள் என்று கூறியதாகவும் அதேபோல் வழக்கறிஞர் கணேசன், மதுரையில் அரசு வழக்கறிஞராக இல்லை போலியாக தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தன்னிடம் வழக்கை முடித்து தருவதாக பத்து லட்ச ரூபாய் வாங்கி மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் வழக்கறிஞர் கணேசன் மீதும் போலி சாமியார் ராஜலட்சுமி மீதும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் மோகனசுந்தரம் புகார் அளித்தார்.
Next Story

