கரூர்- காவலர் தினம்-தண்டால் போட்டியில் SP பங்கேற்று துவக்கி வைத்தார்.

கரூர்- காவலர் தினம்-தண்டால் போட்டியில் SP பங்கேற்று துவக்கி வைத்தார்.
கரூர்- காவலர் தினம்-தண்டால் போட்டியில் SP பங்கேற்று துவக்கி வைத்தார். செப்டம்பர் 6 காவலர் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தண்டால் (Push up) எடுக்கும் போட்டி நடைபெற்றது. குறைந்தது 25 தண்டால் எடுக்க வேண்டும் என நிர்ணயம் செய்து நடத்தப்பட்ட இப்போட்டியில் 30க்கும் மேற்பட்ட காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இறுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா கலந்து கொண்டு ** தண்டால் எடுத்தார். முதல் மூன்று இடங்கள் பிடித்த சசிகுமார், சதீஷ்குமார், நிரஞ்சன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில் பங்கேற்ற அனைவரையும், காவல் அதிகாரிகள் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். இதனை தொடர்ந்து நீத்தார் நினைவுதூணிற்கு மதியாதை செய்தனர். இதில் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
Next Story