கரூர்-அதிமுக சுவர் விளம்பரம் செய்ய திமுக எதிர்ப்பு-SP யிடம் புகார்.
கரூர்-அதிமுக சுவர் விளம்பரம் செய்ய திமுக எதிர்ப்பு-SP யிடம் புகார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி கரூர் மாவட்டத்தில் வரும் 25, 26ம் தேதி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக நேற்று காலை வேலாயுதம்பாளையம் பகுதியில் சுவர் விளம்பரம் செய்தனர். நேற்று மதியம் திமுகவினர் சுவரில் திமுக என்று எழுதி தடுத்து நிறுத்தினார்கள். சம்பவம் அறிந்த வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளர் ஓம் பிரகாஷ் அதிமுகவினரிடம் 17 ஆம் தேதி திமுக முப்பெரும் விழா நடைபெறுவதால் அதுவரை விளம்பரம் செய்ய வேண்டாம் எனக் கூறியதால் அதிமுக மாவட்ட செயலாளர் எம் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் நேற்று மாலை கரூர் எஸ் பி ஜோஸ் தங்கய்யாவை சந்தித்து புகார் மனு அளித்தார். புகாரை ஆய்வு செய்த எஸ் பி வரும் 25, 26ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி கரூர் வருகையை ஒட்டி வரும்18ம் தேதி முதல் சுவர் விளம்பரம் எழுதிக் கொள்ள மாவட்ட கண்காணிப்பாளர் உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Next Story






