கோவை: சோலார் பேனல் அமைக்க மானியம் வழங்க வேண்டும் -sp.வேலுமணி

கோவை: சோலார் பேனல் அமைக்க மானியம் வழங்க வேண்டும் -sp.வேலுமணி
X
விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உண்ணாவிரத பந்தலுக்கு நேற்று நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தார்.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உண்ணாவிரத பந்தலுக்கு நேற்று நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுதொடர்பாக அதிமுக சார்பில் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததாகவும், ஆனால் ஒரு மாதமாக போராட்டம் நீடித்து வரும் நிலையில், ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டுவதற்கு தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும், மின் கட்டண உயர்வு மற்றும் உதிரிபாக விலை உயர்வை சமாளிக்க, விசைத்தறிக்கூடங்களுக்கு மானிய விலையில் சோலார் பேனல் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை திமுக அரசு செய்யத் தவறினால், 2026-ல் ஆட்சிக்கு வரும் அதிமுக அரசு இந்தக் கோரிக்கையை கட்டாயம் நிறைவேற்றும் என்று உறுதியளித்தார்.இவர்களுக்கு சோலார் பேனல் அமைக்க மானியம் வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
Next Story