கோவை: STAND FOR HER மனிதச்சங்கிலி சாதனை!
கோவை ரோட்டரி சங்கங்கள் மற்றும் ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி இணைந்து நேற்று கல்லூரி வளாகத்தில் STAND FOR HER என்ற வடிவிலான பிரமாண்ட மனிதச்சங்கிலி நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிகழ்வில் 3 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பங்கேற்று இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் புதிய சாதனை படைத்தனர். பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற இந்நிகழ்வில், கோவையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் தொலைபேசி எண்களை உள்ளடக்கிய புதிய பாதுகாப்பு செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், பெண்களின் பாதுகாப்பை எந்த நேரத்திலும் உறுதி செய்வோம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இதனைத் தொடர்ந்து, 3 ஆயிரம் பங்கேற்பாளர்கள் அடங்கிய குழுவினர் பிரமாண்ட பதாகையில் கையெழுத்திட்டனர்.
Next Story



