கோவை எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் The Future is Here கருத்தரங்கு – லோகேஷ் கனகராஜ் சிறப்பு உரை !

X
கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.வி.எம் (தனியார்) பள்ளியில் “The Future is Here” என்ற தலைப்பில் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார். மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “One is Never Ever Take Advise… அடுத்தது இணைந்து பணியாற்ற கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார். மேலும், “வாழ்க்கையை படம் பார்த்து மட்டும் கற்றுக்கொள்ள முடியாது, படம் ஒரு பொழுதுபோக்கு மட்டுமே” என்று வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளம் வயதிலேயே மாணவர்கள் பேட்டண்ட் குறித்து பேசுவது பெருமை என பாராட்டினார். சினிமாவில் AI பயன்பாடு குறித்து, “AI ஆதிக்கம் செலுத்தாது, ஆனால் உதவியாக இருக்கும். தொழில்நுட்பத்தை எவ்வளவு பயன்படுத்துவது நம் கையில் தான்” என்றார். தனது கூலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் குரல் AI தொழில்நுட்பம் எனவும், ஆனால் இசைக்காக அனிருத்துடன் பணியாற்றுவதால் தனக்கு AI தேவையில்லை எனவும் குறிப்பிட்டார். வெற்றிமாறனின் கருத்தியல் கருத்துகள் குறித்து கேட்டபோது, “அது அவருடைய பார்வை, நான் இப்போதுதான் தயாரிப்பு நிறுவனம் துவக்கியுள்ளேன், ஆனால் அவர் அதிகப்படங்கள் இயக்கியுள்ளார்” என்று பதிலளித்தார்.
Next Story

