அண்ணாமலைக் குற்றச்சாட்டு - TNPSC தேர்வில் முறைகேடு –அண்ணாமலை குற்றச்சாட்டு !

அண்ணாமலைக் குற்றச்சாட்டு - TNPSC தேர்வில் முறைகேடு –அண்ணாமலை குற்றச்சாட்டு !
X
TNPSC தேர்வில் பாடத்திட்டத்திற்கு வெளியான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
அண்ணாமலை கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, TNPSC தேர்வில் பாடத்திட்டத்திற்கு வெளியான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். Group 4 தேர்வு முறையாக நடக்கவில்லை என்றும், பாதுகாப்பு முறைகள் சரியில்லை என்றும் கூறினார். பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மூடிய பிறகு வற்புறுத்தி திறக்கப்பட்ட விவகாரம் குறித்து நடவடிக்கை தேவை என்றும், சம்பந்தப்பட்டவர்களிடம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் இருக்கின்றார் என்றும், அவரைச் சுற்றி பரப்பப்படும் தவறான தகவல்கள் எதிர்க்கட்சிகள் கிளப்பும் புரளி என்று விமர்சித்தார். பாஜக தேர்தல் அறிக்கையில், காணாமல் போன கோவில் சொத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது குறித்து எச். ராஜா அறிக்கையை தயார் செய்து வருகிறார் என்றும் கூறினார். திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி தடைப்பட்டதாகவும், மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர் என்றும் கூறிய அண்ணாமலை, NDA கூட்டணிக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்றும், எதிர்கட்சி மாற்று ஆட்சி கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Next Story