தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) நடத்தப்படும் உதவி ஆய்வாளர்களுக்கான(SI) எழுத்துத் தேர்வு திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது
Tiruchengode King 24x7 |21 Dec 2025 7:30 PM ISTதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் உதவி ஆய்வாளர்களுக்கான(SI) இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.இதில் தேர்வு எழுத2356 ஆண்கள் 669 பெண்கள் என 3025 பேர் விண்ணப்பித்திருந்தனர் தேர்வு எழுத வந்தவர்கள் கடுமையான பரிசோதனைக்கு பின்னரே அனுமதி
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) நடத்தப்படும் உதவி ஆய்வாளர்களுக்கான(SI) இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. இதில் தேர்வு எழுத 2ஆயிரத்து356 ஆண்கள் 669 பெண்கள் என 3025 பேர் விண்ணப்பித்து இருந்தனர். விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுத வந்த போது கடுமையான பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப் பட்டனர். அசல் அடையாள அட்டை, ஹால் டிக்கெட் மற்றும் கருப்பு பேனா ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் உள்ளே கொண்டு வரக்கூடாது எனஅறிவுறுத்தப் பட்டது.எலக்ட்ரானிக் சாதனங்கள் செல்போன்கள் வைத்திருக்கிறார்கள் என கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப் பட்டது. பெண்களுக்கு தனி இடம் அமைத்து சோதனை நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விமலா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.தேர்வு அறைகளை ஊர்க்காவல் படைத்துறை ஐஜி ஜெயஸ்ரீ ஆய்வு செய்தார்.தேர்வு எழுத மொத்தமாக 3025 பேர்கள் விண்ணப்பித்து இருந்தனர் இதில் ஆண்கள் 2356 பேர் பெண்கள் 669 ஆவார்கள்காலை ஒன்பது முப்பது மணி வரை தேர்வு எழுத அனுமதிக்கப் பட்ட நிலையில் தேர்வு எழுத 2106 பேர் மட்டுமே வந்தனர். ஆண்கள்677 பேர் பெண்கள் 242 பேர்என 919 பேர் தேர்வு எழுத வரவில்லை
Next Story



