ஜெயங்கொண்டம்  கே ஆர் டி டிவிஎஸ் நிறுவனத்தின் குடும்ப விழா : புதிய  TVS Xl 100 I-Touch Alloy* வாகனம் அறிமுகம்..

ஜெயங்கொண்டம்  கே ஆர் டி டிவிஎஸ் நிறுவனத்தின் குடும்ப விழா : புதிய  TVS Xl 100 I-Touch Alloy* வாகனம் அறிமுகம்..
X
ஜெயங்கொண்டம்  கே ஆர் டி டிவிஎஸ் நிறுவனத்தின் குடும்ப விழா மற்றும் புதிய  TVS Xl 100 I-Touch Alloy* வாகனம் அறிமுக விழா நடைபெற்றது..
அரியலூர், அக்.5- ஜெயங்கொண்டம் கே ஆர் டி டிவிஎஸ் நிறுவனத்தில் நடைபெற்ற குடும்ப விழாவில் புதிய வரவான TVS Xl 100 I-Touch Alloy* என்ற வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது.. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கே ஆர் டி டிவிஎஸ் நிறுவனத்தின் மொபட் வாடிக்கையாளர்களின் குடும்ப விழா மற்றும் புதிய வரவான TVS Xl 100 I-Touch Alloy* வாகனம் அறிமுக விழா திருச்சி சரக ஊர்க்காவல் படை உதவி வட்டார தளபதியும், கேஆர் டி டிவிஎஸ் உரிமையாளருமான கே.ராஜன்  தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக கே ஆர் டி டிவிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் ராஜேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கே ஆர் டி டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மொபட் வாடிக்கையாளர்களின் குடும்ப விழாவில்  புதிய வரவான TVS Xl 100 I-Touch Alloy* என்ற வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது. விஜய் டிவி புகழ் வினோத்பாபு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் புதிதாக அறிமுக வாகனத்தின் சிறப்புகளை மேலாளர் சண்முகம் விளக்கி  கூறினார். மேலும் நேற்று நடைபெற்ற குடும்ப விழாவில் வாகனம் வாங்கிய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பு பரிசும், எக்ஸ்ட்ரா பிட்டிங்குகள்,  ஃபுல் டேங்க் பெட்ரோல், மெகா பரிசுப் பொருட்கள். மேலும் நிதி நிறுவனங்களில் வண்டி வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசும். மேலும் கூடுதலாக 2000 ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடைபெற்ற குடும்ப விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து உபசரிப்பு மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மெஹந்தி என பல்வேறு வசதிகளை ஏற்படுத்திய  கே ஆர் டி டிவிஎஸ் நிறுவனத்தினர் அனைவரையும் திருப்தியுடன் அனுப்பி வைத்தனர். இதில் லயன் சங்க நிர்வாகிகளான திருநாவுக்கரசு, செல்வராஜ், முருகானந்தம், சதாசிவம், பிரபு, ராஜா மற்றும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள்  உள்ளிட்ட முதலாளிகள்,  நிதி நிறுவன அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கேஆர் டி டிவிஎஸ்  நிறுவனத்தின் அலுவலர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.  முடிவில் கேஆர் டி டிவிஎஸ் கம்பெனி ஆண்டிமடம் கிளை மேலாளர் செல்வகணபதி நன்றி கூறினார். :-
Next Story