நாட்றம்பள்ளி அருகே விவசாயிடம் vao லஞ்சம் வாங்கிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

X
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் லஞ்சம் வாங்கும் விஏஓ வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா சொறகாயல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் மகன் தேவராஜ் இவர் தன் விவசாய நிலத்தை பயன்படுத்தி வங்கியில் பயிர் கடன் பெறுவதற்கு அடங்கள் வாங்க சொறகாயல்நத்தம் கிராம நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணனை அணுகியுள்ளார்.. அப்போது அடங்கல் வழங்க விவசாயி இடம் கிராம நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன் 1000 ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். விவசாயிடம் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெரும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்த கிராம நிர்வாக அலுவலர் வாணியம்பாடி தாலுகாவில் இருந்து பணி மாறுதல் ஆகி கடந்த திங்கட்கிழமை சொறகாயல்நத்தம் கிராமத்தில் பணியில் சேர்ந்துள்ளார் மேலும் இதுபோன்று அந்த கிராம மக்கள் பல பேரிடம் லஞ்சம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Next Story

