ஓய்வு பெற்ற VAO மரணத்தில் 17 வயது சிறுவன் கைது

X
திண்டுக்கல் வேடசந்தூர் அருகே புளியமரத்து கோட்டை பகுதியை சேர்ந்த மாரியப்பன்(70) இவர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஆவார். இந்நிலையில் இவர் கடந்த 11ம் தேதி இறந்து கிடந்தார். இது தொடர்பாக உறவினர்கள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் இது குறித்து வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம் தலை மேலான போலீசார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் நேற்று 17-ம் தேதி மாரியப்பனை புதைத்த இடத்தில் தோண்டி எடுத்து மருத்துவ குழுவினர் பிரத பரிசோதனை செய்தனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக மாரியப்பன் தோட்டத்தில் வேலை செய்த 17 வயது சிறுவனை வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நகைக்காக கொலை நடைபெற்றதாக தெரிய வருகிறது.
Next Story

