மருதுபாண்டியர் கல்லூரியில் பயோ பெஸ்ட் -VI யகல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள்

மருதுபாண்டியர் கல்லூரியில்  பயோ பெஸ்ட் -VI யகல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள்
X
கல்லூரி விழா
தஞ்சாவூர், மருதுபாண்டியர் கல்லூரியில், உயிர் அறிவியல் துறையின் சார்பாக கல்லூரிகளுக்கு இடையேயான பயோய பெஸ்ட்ய- VI என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.  இதில், மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர்  மா.விஜயா முன்னிலை வகித்தார். துணைமுதல்வர்  ரா.தங்கராஜ், ஆராய்ச்சி புலத்தலைவர்  கோ.அர்ச்சுனன், கல்விசார் புலத்தலைவர் மதுகிருத்திகா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  இதில், 10 க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து மாணவ-மாணவிகள் வருகை புரிந்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.  இந்நிகழ்வில், ஒட்டுமொத்த வெற்றியாளர்களுக்கான முதல் பரிசை நாகப்பட்டினம் இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி மாணவர்களும், இரண்டாம் பரிசை புதுக்கோட்டை ஜெ.ஜெ.கல்லூரி மாணவர்களும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன் பேசினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், கோப்பைகள் மற்றும் பரிசுகளை கல்லூரி முதல்வர் வழங்கினார்.  முன்னதாக நுண்ணுயிரியல் துறை உதவிப்பேராசிரியர் மதன்ராஜ் வரவேற்றார். நிறைவாக உயிர் தொழில்நுட்பவியல் உதவிப்பேராசிரியர்  கலைமகள் நன்றி கூறினார்.  இந்த போட்டியை உயிர் தொழில் நுட்பவியல் துறைத்தலைவர்  இரா. இராஜகுமார், உயிர் வேதியியல் துறைத்தலைவர் வே. ராமமூர்த்தி, நுண்ணுயிரியல் துறைத்தலைவர்  பிரின்ஸ், உயிர் அறிவியல் துறைப்பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மேலாளர் இரா. கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.  இந்நிகழ்ச்சியை உயிர் வேதியியல் துறை உதவிப்பேராசிரியர்  கி.துர்காதேவி தொகுத்து வழங்கினார்.
Next Story