நாமக்கல் வருகை புரிந்த தமிழக முதல்வரிடம் பாராளுமன்ற உறுப்பினர் VS.மாதேஸ்வரன் எம்பி கோரிக்கை மனு !

நாமக்கல் வருகை புரிந்த தமிழக முதல்வரிடம் பாராளுமன்ற உறுப்பினர் VS.மாதேஸ்வரன் எம்பி கோரிக்கை மனு !
நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டிய பத்து பக்கம் கோரிக்கையை மனுவாக முதல்வரிடம் வழங்கிய நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பொம்மைகுட்டைமேடு என்ற இடத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், 140 திட்டப் பணிகளுக்கு ரூ. 366 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார். ரூ. 298 கோடி மதிப்பீட்டில் 134 நிறைவுற்ற திட்டப் பணிகள் திறந்து வைத்தார். சுமார் 16 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அந்த வகையில் ரூ.664 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நிறைவுற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைத்தார், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்
நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் V.S. மாதேஸ்வரன் எம்பி தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டிய பல்வேறு திட்டங்கள் பற்றி முழு விவரங்களுடன் அடங்கிய கோரிக்கை மனுவை முதல்வரிடம் வழங்கினார்
அந்த கோரிக்கை மனுவின் சாராம்சம் வருமாறு... 1.கோழிப்பண்ணை தொழிலுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியச்சான்று விரைந்து வழங்குவது. 2.நலிவடைந்து வரும் லாரி மற்றும் ரிக் தொழிலை மீட்பது. 3.பரமத்தி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிலிக்கல்பாளையம் கொடுமுடி உயர்மட்ட பாலம் வேண்டுதல். 4.சங்ககிரி மலைக்கோட்டையில் மாவீரன் தீரன் சின்னமலை சிலை நிறுவுதல். 5.நாமக்கல் மாவட்ட தலைநகரில் மாவீரன் தீரன் சின்னமலை சிலை நிறுவுதல். 6.மோகனூர் காவிரி ஆற்றின் குறுகிய கதவணை அமைக்க வேண்டுதல். 7.நாமக்கல் கவிஞருக்கு சிலை அமைத்தல். 8.நாமக்கல் மோகனூர் சாலையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை தாலுக்கா மருத்துவமனையாக செயல்பட கோரிக்கை விடுத்தல். 9.எருமப்பட்டி பகுதியில் இருந்து கொல்லிமலை செல்ல பாதை அமைத்து தருதல் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பாராளுமன்ற உறுப்பினர் VS.மாதேஸ்வரன் MP முதலமைச்சர் அவர்களிடம் வழங்கினார்.
Next Story